‘யுத்தத்தின் பின் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி’
-
ஆஸ்பத்திரி மறுசீரமைப்பு : ரூ. 2135 மில்.
-
பாடசாலை அபிவிருத்தி : ரூ. 1341 மில்.
-
பாலங்கள் நிர்மாணம் : ரூ. 75071 மில்.
30 வருட யுத்தத்தால் இன்னல்பட்ட வடபகுதி மக்களுக்காக அரசு மேற்கொண்ட பாரிய தேசிய மட்டப் பணிகள் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி தயாரித்த 'மோதலில் இருந்து ஸ்திரப்பாடு' என்ற அறிக்கை அமைச் சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதுவரை சுகாதாரத்துறை மேம் பாட்டுக்கும் பிரதான ஆஸ்பத்திரிகளின் மறுசீரமைப்புக்கும் 2135 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
எதிர்கால அபிவிருத்திக்காக 9254 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
வடக்கில் சேதமுற்ற 1830 பாடசாலை கட்டடங்கள் 1341 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளன. தற்போது வடக்கில் 1026 பாடசாலைகளில் 990 பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
2,60,582 மாணவர்கள் பயில்கின்றனர்.
13,967 ஆசிரியர்கள் கடமை புரிகின்றனர்.
78,144 நிரந்தர வீடுகள் அமைக்கப்படும். 27,983 வீடுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்திய அரச நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்படும் 38,000 வீடுகளுள் 1000 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பெருந்தெருக்கள், ரயில் பாதை மறுசீரமைப்பு பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படுகின்றன.
மன்னார் பாலம், சங்குபிட்டி பாலம், அரலி ஆறு பாலம் உட்பட பாதை அபிவிருத்திக்காக 75,071 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
650 மில்லியன் டொலர் இந்தியன் கடன் உதவித் திட்டத்தின் கீழ் வட பகுதி ரயில் பாதை நிர்மாணிக்கப்படுகிறது.
கைவிடப்பட்ட 180,000 ஏக்கர் வயலில் அறுவடை மேற்கொள்ளப்படுவதற்காக விதை நெல் இலவசமாக வழங்கப்பட்டு மானிய விலையில் உரமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
13.2 பில்லியன் ரூபா செலவில் ஒன்பது மின் விநியோகத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. வரலாற்றில் முதல் முறையாக தேசிய மின் திட்டத்துடன் வடக்கு சேர்க்கப்பட்டு உள்ளது.
நீர்ப்பாசன திட்டங்களுக்கு 6333.9 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
நீர் விநியோகம், சுகாதார வசதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
54.9 பில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயத்தைப் போன்று கடற்றொழில் துறையில் பெரும் முதலீடு செய்யப்பட்டது.
இலங்கையில் கடலோரப் பகுதியின் மூன்றிலொன்று பகுதி வட பகுதியால் அமைகிறது. மீன்பிடி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டதால் 2007 ல் 15250 மெட்ரிக் தொன் மீன் உற்பத்தி 2011 ல் 48520 மெட்ரிக் தொன்னாக அதிகரித்தது. வங்கி, தனியார் துறை முதலீடுகள் அதிகரித்தன. 68268 மில்லியன் ரூபா பெறுமதியான 23 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
உல்லாச பிரயாணத் துறையும் முன்னேற்றம் கண்டது.
2217 மில்லியன் ரூபா முதலீட்டின் கீழ் 328 அறைகளைக் கொண்ட 09 ஹோட்டல் திட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. (எப். எம்.)
(thinakaran)
ஆஸ்பத்திரி மறுசீரமைப்பு : ரூ. 2135 மில்.
பாடசாலை அபிவிருத்தி : ரூ. 1341 மில்.
பாலங்கள் நிர்மாணம் : ரூ. 75071 மில்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.