இவர்கள் தங்களது உத்தியோகபூர்வக் கடமைகளை அலட்சியப்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே கடமையிலிருந்து தற்காலிமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
உயர் மட்ட பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவரினுடைய உறவினரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இவர்கள் நடந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடன் அட்டை மோசடி தொடர்பான விசாரணையில் உயர் மட்ட பொலிஸ் அதிகாரி ஒருவரினுடைய உறவினரின் பெயரை தவறுதலாக இவர்கள் சம்பந்தப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இவர்கள் உரிய முறையில் முறைப்பாடுகளை பதிவு செய்யவில்லை எனவும் வாக்குமூலங்களை தவறான முறையில் பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.