......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 6 December 2012

மட்டக்களப்பில் முஸ்லிம்கள் பிரியாணி உண்பதற்கு ஜனாதிபதி காரணம்: மேர்வின்

மட்டக்களப்பு வாழ் முஸ்லிம் மக்கள் இன்று அதிகளவில் பிரியாணி உண்கின்றனர். அது மட்டுமல்லாது ஏனையோருக்கும் பிரியாணி வழங்கி மகிழ்கின்றனர். இந்த நிலைமையை உருவாக்கி கொடுத்த பெருமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~வையே சாரும் என மக்கள் அலுவல்கள் அமைச்சர் மேர்வின் சில்வா பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 14 அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

'கடைகளை மூடுவதைச் சொல்வதற்கு முன்னர் 30 வருடங்களாக போக முடியாத பாதைகள், செல்ல முடியாத கோயில்கள், தேவாலயங்கள் எத்தனை இருக்கின்றன.

எனவே புத்திஜீவியான கபீர் ஹாசிம் எம்.பி. உண்மையை பேச வேண்டும். முதலில் நீங்கள் சொந்த ஊருக்கு சென்று பாருங்கள். பயிர்கள் செழிப்பாக வளர்ந்து வருகின்றன. உங்கள் மக்கள் இன்று அதிகளவில் பிரியாணி உண்கின்றனர். பிரியாணிகளை ஏனையோருக்கு வழங்குகின்றனர். 

இவ்வாறான நிலை மட்டக்களப்பில் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனை ஏற்படுத்தியவர் ஜனாதிபதியே ஆவார் என்றார்.


(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE