பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பாராளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகளிலிருந்து வெளிநடப்புச் செய்தமை பாராளுமன்ற கௌரவம், மக்கள் ஆணை, மற்றும் இறையாண்மைக்கு எதிரான செயாகுமென தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவுக்குழு மீது நம்பிக்கை வைத்து அனைத்து உறுப்பினர்களும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
நேற்று அலரிமாளிகைக்கு அராசங்கத்தில் அங்கம் வகிக்கின்ற அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் திடீரென அழைத்து அவசர சந்திப்பொன்றை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார்.
இதன்போதே மேற்கொண்டவாறு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இச் சந்திப்பு குறித்து அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறுகையில்,
விசேட பாராளுமன்றத் தெரிவுக்குழுவினூடாக பிரதம நீதியரசருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றவியல் பிரேரணை மீதான விசாரணைகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் தெளிவுபடுத்தினார்.
இதன்போது பிரதம நீதியரசர் விசேட தெரிவுக்குழுவிலிருந்து வெளிநடப்புச் செய்தமையானது பாராளுமன்ற கௌரவத்தை பாதிக்கும் செயலெனக் குறிப்பிட்டார்.
எனினும் அனைத்து உறுப்பினர்களும் தெரிவிக்குழு மீது நம்பிக்கை வைத்து நல்ல தீர்ப்பிற்காக ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதாக அவர் கூறினார்.
(veerakesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.