......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 31 December 2012

கள்ளக்காதல் மூலம் குழந்தையை பெற்று நிலத்தில் புதைத்த தாய் உட்பட இருவருக்கு விளக்கமறியல்

அக்கரைப்பற்று ஆலிம்நகர் பகுதியில் கள்ளக்காதல் மூலம் குழந்தை ஒன்றை பிரசவித்து அதனை நிலத்தில் புதைத்த தாயொருவர் உட்பட சந்தேக நபர்கள் இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பெண்ணின் கணவர் வேலைக்காக வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த பெண் கடந்த 24ஆம் திகதி குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். எனினும் குழந்தை இறந்தே பிறந்தமையினால் குழந்தையை பொலித்தீன் பையினால் சுற்றி நிலத்தில் குறித்த பெண் புதைத்துள்ளார்.

இதனையடுத்து அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த தகவலினடிப்படையில் நேற்று முன்தினம் குறித்த பெண் உட்பட சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கணவர் வெளிநாட்டில் இருந்த போது கள்ளக்காதல் தொடர்பால் கர்ப்பம் தரித்து குழந்தையை பிரசவித்துள்ளதாகவும் குழந்தை இறந்தே பிறந்துள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே குறித்த நபர்களை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.



(virakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE