......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 27 December 2012

ஜனாதிபதி விலகிச்செல்ல தயாரில்லை: திஸ்ஸ

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை விசாரணை நடவடிக்கைகள் குறித்தும் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பிலும் ஜனாதிபதி விலகிச்செல்வதற்கு தயாரில்லை. என்று சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார்.


இது தொடர்பில் சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்குமாறும் இன்றேல் உள்ளக குழுவை நியமிக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தன.

எனினும் தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதி இதில் எதனையும் செய்யமாட்டேன் என்றும் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற செயல்முறை தொடரும் என்றும் எதிர்காலத்தில் புதிய சட்டங்களை தயாரிப்பது தொடர்பில் அடுத்தவருடத்தில் கவனம் செலுத்தப்படும்.

குற்றப்பிரேரணை தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற செயன்முறை அரசியலமைப்பின் பிரகாரம் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் என்றார்.




(tamilmirrror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE