......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 13 December 2012

இன்னும் நான்கு மாதங்களுக்கு பலஸ்தீன நிதியை வழங்காமல் இருக்க இஸ்ரேல் திட்டம்


பலஸ்தீன நிர்வாகத்திற்கு சேரவேண்டிய வரி வருவாயை எதிர்வரும் மார்ச் மாதம் வரை நிறுத்திவைக்க இஸ்ரேல் அரசு தீர்மானித்துள்ளது.
ஐ.நாவில் பலஸ்தீனின் தனிநாட்டு கோரிக்கைக்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பலஸ்தீன ஆக்கிரமிப்பு மேற்குக் கரை பகுதியிலிருந்து வரி மற்றும் சுங்கக் கட்டணங்கள் மூலம் பெறும் வருவாயை பலஸ்தீன நிர்வாகத்திற்கு பரிமாற்ற இரு தரப்பு அமைதி உடன்படிக்கையில் இஸ்ரேல் உடன்பட்டுள்ளது. இதில் இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு மாதாந்தம் 100 மில்லியன் டொலருக்கும் மேற்பட்ட தொகையை வழங்குகிறது. இதன் மூலமே பலஸ்தீன நிர்வாகம் அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்கி வருகிறது.
“பலஸ்தீன் நான்கு மாதங்களுக்கு எம்மிடம் இருந்து ஒரு சதத்தையும் எதிர்ப்பார்க்க முடியாது. நான்கு மாதங்களின் பின் அடுத்த நடவடிக்கை குறித்து நாம் சிந்திப்போம்” என்று இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் அவிக்டோர் லிப்ரமன் குறிப்பிட்டார்.
பலஸ்தீனம் கடந்த மாதம் ஐ.நாவின் அங்கத்துவமற்ற நாடு என்ற அந்தஸ்த்தை பெற்றது. பலஸ்தீனத்தின் இந்த செயல் இஸ்ரேலுடனான அமைதி உடன்படிக்கையை மீறும் செயல் என இஸ்ரேல் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
ஏற்கனவே இந்த டிசம்பரில் பலஸ்தீனத்திற்கு சேரவேண்டிய வரி வருவாயை இஸ்ரேல் வழங்கவில்லை. இந்த தொகை மூலம் பலஸ்தீன், இஸ்ரேல் மின்சார கூட்டுத்தாபனத்திற்கு வழங்கவேண்டிய 200 மில்லியன் டொலர் கடனை செலுத்த ஏற்பாடு செய்வதாக இஸ்ரேல் அரசு கூறியுள்ளது.
இந்நிலையில் பலஸ்தீனம், இஸ்ரேல் நீர் பலைக்கும் கடன் செலுத்த வேண்டி உள்ளதால் இந்த தொகை மூலம் அதுவும் செலுத்தப்படும் என பிரதமர் நெதன்யாகுவின் அரசில் கடும் போக்குவாதியான வெளியுறவு அமைச்சர் லிப்ரமன் குறிப்பிட்டுள்ளார்.
“பலஸ்தீனத்தின் எழுத்து மூலமான அங்கீகாரத்தை இஸ்ரேல் ஏற்க தயாராக இல்லை. எவராவது இந்த கோணத்தில் வெற்றிபெற முடியும் அல்லது இலக்கை எட்டிவிட்டுவிட்டோம் என்று நினைத்தால் அது தவறாகும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தமக்கான நிதியை தராமல் இஸ்ரேல் கொள்ளை குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருப்பதாக சிரேஷ்ட பலஸ்தீன அதிகாரி யாசிர் அப்த் ரப்போ குற்றம்சாட்டினார். இஸ்ரேலின் நடவடிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியமும் கண்டனம் வெளியிட்டிருந்தது.


(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE