......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Thursday, 13 December 2012
இளம் வாலிபனை காம வலையில் சிக்கவைத்த பெண்!: தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு
இளம் வாலிபனை மயக்கி அவரை காம வலையில் வீழ்த்தி உறவு வைத்துக் கொண்ட 38 வயதுப் பெண்ணுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இருப்பினும் அந்தத் தண்டனையை நீதிமன்றம் 2 வருடத்திற்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளமையானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பெண்ணின் பெயர் மேரி ஜீன் பிரண்ட்ஷிப். பிரிஸ்டலைச் சேர்ந்தவர். திருமணமானவர்.
இந்த நிலையில் இவர் இளம் வாலிபன் ஒருவன் மீது ஆசை கொண்டார். அந்தப் பையனும் இப்பெண்ணுடன் நெருக்கமாகப் பழகத் தொடங்கினான். இது 6 மாதமாக நீடித்துள்ளது. இருவரும் உடலுறவிலும் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே கடந்த 18 வருடமாக தனது கணவருடன் வாழ்க்கை நடத்தி வரும் மேரி வாலிபனுடனும் உறவு கொள்வதை பழக்கமாக வைத்திருந்துள்ளார்.
இதை தனது தோழியர் சிலரிடம் பெருமையாகவும் கூறியுள்ளார். அவர்கள் மூலமாக காவல்துறை வரை விஷயம் சென்றுள்ளது. இதையடுத்து மிகவும் குறைந்த வயது கொண்ட வாலிபனை மயக்கி தவறான உறவுக்குப் பயன்படுத்தியதாக இவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது பொலிஸ்.
இதில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த பிரிஸ்டல் நீதிமன்றம், மேரிக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது.
ஆனால் அவரது தரப்பு வழக்கறிஞர், மேரிக்கும் வாலிபனுக்கும் இடையே தவறான உறவு இருப்பதாக கூறப்படுவது தவறு. உண்மையில் அந்தப் பையனுக்கு வயது 16க்கு மேல் ஆகிறது.
எனவே இந்த உறவில் தவறு இருப்பதாக கூற முடியாது. இதுகுறித்து மேலும் சட்ட ஆலோசனை மேற்கொண்டுள்ளோம்.
எனவே தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரினார். இதையடுத்து தண்டனையை 2 வருடத்திற்கு நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.