......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 18 December 2012

சிரியாவில் பலஸ்தீன அகதி முகாம் மீது வான் தாக்குதல்


சிரிய தலைநகர் டமஸ்கஸில் உள்ள பலஸ்தீன அகதிமுகாம் மீது யுத்த விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்த தாக்குதலில் பலர் கொல்லப் பட்டபோதும் பலியானோர் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை.
எனினும் இந்த வான் தாக்குதலில் குறைந்தது 8 பேர் பலியாகியுள்ளதாக சிரியா தொடர்பில் கண்காணிப்பில் ஈடுபடும் மனித உரிமை அமைப்பு குறிப்பிட் டுள்ளது.
பலஸ்தீன அகதிகளுடன் உள்நாட்டு யுத்தத்தில் இடம்பெயர்ந்த சிரிய நாட்டவரும் உள்ள அல் யமுக் அகதி முகாம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் குறித்த பகுதியில் மோதல் இடம்பெறுவதாகவும் கொல்லப்பட்டோர் உடல்கள் பள்ளிவாசலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் எதிர்ப்பாளர்கள் கூறியுள்ளனர்.
சிரிய தலைநகரில் அண்மைய வாரங்களாக மோதல்கள் பரவி வருகின்றன. தெற்கு டமஸ்கஸில் இருக்கும் யார்முக் அகதி முகாம் மிகப் பெரிய பலஸ்தீன அகதி முகாமாகும். சிரியாவில் சுமார் 500,000 பலஸ்தீனர்கள் உள்ளனர். இவர்கள் அரசுக்கு ஆதரவு மற்றும் எதிர் என பிரிந்து செயற்படுகின்றனர்.

(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE