......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Saturday, 1 December 2012
சிரியாவில் இணைய மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிப்பு: பாரிய தாக்குதலுக்கு தயாராகும் அசாத் படை!
சிரியாவில் மோதல் நிலை உக்கிரமடைந்து வரும் நிலையில் இணையம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அரச படையினரால் கிளர்ச்சியாளர்கள் மீது பாரிய தாக்குதல் நடத்தப்படலாம் என அஞ்சப்படுகின்றது.
இதேவேளை டமஸ்கஸ் விமானநிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற மோதல் காரணமாக பல விமான சேவை நிறுவனங்கள் தங்களது பயணத்தினை இரத்துச் செய்துள்ளன.
அசாத் ஆதரவுப் படையினர் கடந்த சில வாரங்களாக சிறிது பின்னடைவைச் சந்தித்துள்ளன.
சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் அசாத்தை பதவிவிலகக்கோரி இடம்பெற்ற அமைதியான மோதல்கள் தற்போது உள்நாட்டுப் போராக மாறியுள்ளது.
இதனால் சுமார் 50,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.