......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 3 December 2012

மாத இறுதியில் வெட்புள்ளி வெளியிடப்படும்?

(கெலும் பண்டார)

பல்கலைக்கழக அடுத்த கல்வி ஆண்டுக்கு மாணவர்களை தெரிவுசெய்வதற்கான வெட்புள்ளி இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


பல்வேறு கற்கை நெறிகளுக்காக நடத்தப்பட்ட தேர்வு பரீட்சை பெறுபேறுகளை டிசெம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுமாறு பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரான பேராசிரியர் காமினி சமரநாயக்க தெரிவித்தார்.

தேர்வு பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியாகி பத்து நாட்களிற்குள் வெட்புள்ளிகளை வெளியிட முடியும் என அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் இந்த மாத இறுதிக்குள் பல்கலைக்கழக தெரிவுக்கான வெட்புள்ளிகள் வெளியிடப்படும் என பேராசிரியர் காமினி சமரநாயக்க நம்பிக்கை வெளியிட்டார்.

பல்கலைக்கழக மாணவர் அனுமதி அடுத்த வருட மார்ச் நடுப்பகுதியில் இடம்பெறும் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க ஏற்கவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE