......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 3 December 2012

கொலை வழக்கு: 8 பொலிஸ் அதிகாரிகள் விடுதலை

By Hafeez 
முன்னாள் ஜே.வி.பி. தலைவர் ரோஹன விஜயவீரவின் சகோதரர் ஆனந்த விஜேயவீர உட்பட நால்வரைக் கொலை செய்த வழக்கின் சந்தேக நபர்களான எட்டு பொலிஸ் அதிகாரிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


கண்டி உயர் நீதிமன்றில் நீதபதி மணிலால் வைத்தியதிலக முன் இடம்பெற்ற விசாரணைகளின் போது பிரதான சாட்சியான
நிகால் ரத்ன டி சில்வா சமுகமளித்திருக்கவில்லை.  மேற்படி சாட்சியைத் தேடிப் பிடிக்கமுடியாதிருப்பதாக வாதி தரப்பில்
தெரிவிக்கப்பட்டதை அடுத்து பிரதான சாட்சி இல்லாமல் வழக்கை மேலும் முன் எடுத்துச் செல்ல முடியாது எனவும் சந்தேக நபர்கள் குற்றமற்றவர்கள் எனவும் தெரிவித்து விடுதலை செய்யப்பட்டனர்.


1989ம் ஆண்டு இடம் பெற்ற இச்சம்பவம் தொடர்பாக பின்வருவோர் சந்தேக நபர்களாகப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
கண்டி பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் அசோக்க பண்டார ஹேரத், பொலிஸ் பரிசோதகர் சீலரத்ன, உப பொலிஸ்
பரிசோதகர் தயானந்த விஜயகோன், சார்ஜன்ட பாருக் யூசுப், பரிசோதகர் லின்டன் அமுனுகம, உப பரிசோதகர் அத்துல
ருபேறு, உப பரிசோதகர் சேமரத்ன, மற்றும் உபபரிசோதகர் பாலிதகே ஆகியோர் மீதே குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE