......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 8 December 2012

தெரிவுக்குழுவிலிருந்து விலகாமல் ஒத்துழைப்பு வழங்கியிருக்க வேண்டும்


சட்டத்துறை நிபுணர்கள் கருத்து
பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண் டாரநாயக்க பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் விசாரணையிலிருந்து வெளியேறி யமை மிகவும் தவறானது என சட்டத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சட்டவாக் கத்துக்கு அமைவாக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளிலிருந்து அவர் விலகிக் கொண்டுள்ளமையானது அரசியலமைப்பை உதாசீனம் செய்யும் செயலாகும் எனவும் சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளிலிருந்து அவர் விலகாமல் தொடர்ந்து அதற்கு ஒத்துழைப்பை வழங்கி உண்மையான காரணத்தை நாட்டு மக்கள் அறிவதற்குச் சந் தர்ப்பம் அளித்திருக்க முடியும் எனவும் அவர்கள் கருத்துக் கூறியுள்ளனர். இதேவேளை; பாராளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் பிரதம நீதியரசர் சமுகம ளிக்காத காரணத்தால் அது தொடர்பில் தீர்க்கமான தீர்மானமொன்றை மேற்கொள்வதற்குப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குப் பூரண அதிகாரம் உள்ளதெனவும் சட்டத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணையை விசாரிப்பதற்கென நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழு முன்னிலையில் பிரதம நீதியரசர் சமுகமளிக்காமை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள், விமர்சனங்கள் வெளிவருகின்ற நிலையில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பீடாதிபதி சட்டத்தரணி கலாநிதி பிரதீப மஹாநாமஹேவா மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி வீ. கே. சொக்ஸி ஆகிய சட்டத்துறை நிபுணர்களே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மேற்படி விவகாரம் தொடர்பில் இவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:- பிரதம நீதியரசர் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு சமுகமளிப்பாராயின் அவரது குற்றமில்லாத் தன்மையை நாட்டின் முன்னிலையில் முன் வைத்திருக்க முடியும்.
தெரிவுக்குழுவானது இரகசியத்தன்மை யுடையது. எனினும் அதன் இறுதி அறிக்கை பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்டு அது மக்களுக்குப் பகிரங்கப்படுத்தப்படும். பிரதம நீதியரசரின் செயற்பாடினூடாக விடயங்கள் மறைக்கப்பட்டுள்ளன. எனினும் பாராளுமன்றத் தெரிவுக்குழு பிரதம நீதியரசரை குற்றவாளியாகத் தீர்ப்பிடும்.
சாதாரண வழக்கு விசாரணைகளில் மனுதாரர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாத பட்சத்தில் அந்த வழக்கு விசாரணையின்றி பிரதிவாதிகள் இல்லாத போதும் குற்றம் தொடர்பில் தீர்ப்பளிப்பதற்கான அதிகாரத்தை நீதிமன்றம் கொண்டுள்ளது. நீதிமன்றத்தைப் போன்றே குறித்த விவகாரத்திலும் நீதிமன்றத்தைப் பின்பற்றிச் செயற்படுவதற்கு பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது எனவும் சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பாராளுமன்றம் எத்தகைய தீர்ப்பினை வழங்கினாலும் இறுதித் தீர்மானத்தை ஜனாதிபதி அவர்களே மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ள சட்டத்தரணி மஹாநாம; அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரிட்டன், இந்தியா போன்ற நாடுகளின் முறை மையும் இதுவே எனச் சுட்டிக்காட்டி யுள்ளதுடன் ஜனநாயகத்திற்கு முதன்மைய ளித்துச் செயற்படும் இலங்கைக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளார்.


(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE