......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 8 December 2012

தெரிவுக்குழு அறிக்கை இன்று கையளிக்கப்படும்

(கெலும் பண்டார, யொஹான் பெரேரா) 

நாடாளுமன்ற தெரிவுக்குழு அதன் விசாரணை அறிக்கையை சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் இன்று சனிக்கிழமை சமர்ப்பிக்கவுள்ளது. 


பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான 14 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பிரேரணையை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவே, அதன் அறிக்கையை இன்று கையளிக்கவுள்ளது. 

நிலையியல் கட்டளையின் 78 அ (1) பிரகாரம், சபாநாயகர் நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக அந்த அறிக்கையை அவரிடம் கையளித்ததன் பின்னர் ஒரு மாதத்துக்கு பின்பே நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

அதன்பின்னர், அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் ஆகக்குறைந் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்படும். அதனையடுத்து, அந்த அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்படும். 

விசாரணை அறிக்கை சபாநாயகரிடம் இன்று கையளிக்கப்பட்டால், அவ்வறிக்கை தொடர்பிலான வாக்கெடுப்பை 2013ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி நடத்தலாம். 



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE