இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டத்தில், தீர்மானங்கள் எதேச்சாதிகாரமான முறையில் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை அச்சங்கத்தின் தலைவர் விஜேதாச ராஜபக்ஷ இன்று மறுத்துள்ளார்.
இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் கைக்கூலிகள் எனவும் பக்கச்சார்பான கருத்துக்களைக் கூறுபவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தனது பதவியை ராஜினாமா செய்த உப தலைவர் முற்சாய்வு உள்ளவர். இவரது கணவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரியாக உள்ளார். இவரது கணவரான ஜயந்த விக்ரமரத்ன, பிரதம நீதியரசரின் கணவருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் அதிகாரியாக உள்ளார். இதனால், அவர் ஒருபோதும் பக்கச்சார்பு அற்றவராக இருக்கவில்லை என அவர் கூறினார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் பக்கச்சார்ப்பு இன்றியே நடத்தப்பட்டது. சுயநல நோக்கம் கொண்ட சிலர் ஊடகங்களுக்காக நாடகம் போட்டனர் என ராஜபக்ஷ கூறினார்.
உபதலைவரின் ராஜினாமாவை தான் வரவேற்பதாகவும் அரது ராஜினாமா இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தை பாதிக்கமாட்டாது எனவும் விஜேதாச ராஜபக்ஷ மேலும் கூறினார்.
(virakesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.