......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 27 December 2012

குற்றப் பிரேரணையை அரசியல் மயப்படுத்தக்கூடாது


பிரதம நீதியரசருக்கு எதிராக பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு கொண்டுவரப்பட்ட குற்றப் பிரேரணையை அரசியல் மயப்படுத்தி நாட்டில் பாராளு மன்ற ஜனநாயகத்தை சீர்குலை யாமல் தக்கவைத்துக் கொள்வ தற்கு இந்நாட்டு பிரஜைகள் அனைவரும் தங்கள் பூரண ஒத் துழைப்பை வழங்க வேண்டுமெ ன்று மனித வளங்கள் துறைக்கு பொறுப்பான சிரேஷ்ட அமை ச்சர் டியு குணசேகர வேண்டு கோள் விடுத்துள்ளார்.

ஏற்கனவே, இடதுசாரி கொள் கையை கடைப்பிடிக்கும் அரசி யல் கட்சிகள் தங்களின் இந்த நிலைப்பாட்டினை ஜனாதிபதி க்கு எடுத்துக்காட்டியிருப்ப தாக தெரிவித்தார். இதே வேளையில் ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவும் இதே கருத்தையே வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் பிரச்சினையை அரசியல் மயப்படுத்தி அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கு பல வெளிநாட்டு நாசகார சக்திகள் சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகளின் ஊடாக சதித்திட்டம் வகுத்து வருவதாகவும், இது விடயத்தில் அரசாங்கம் அவதானமாக இருக்க வேண்டுமென்றும் அரசாங்கத்தை ஆதரிக்கும் சட்டத்தரணிகளும், ஏனைய அரசியல் அவதானிகளும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இத்தகைய தேசத்திற்கு உலக நாடுகள் மத்தியில் அபகீர்த்தியை ஏற்படுத்தும் சதி முயற்சியில் எல்.ரி.ரி.ஈ.யை ஆதரிக்கும் அமைப்புகளும், விரல்விட்டு எண்ணக்கூடிய புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளும் பின்னணியில் இருந்து பணத்தை வாரி இறைக்கின்றன என்றும் அவர்கள் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள்.



(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE