......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 27 December 2012

தொலைந்துபோன யூதர்களெனக் கூறி இந்திய பழங்குடியினரை குடியேற்றும் இஸ்ரேல்


மேற்குக்கரையில் இருப்பை பலப்படுத்த முயற்சி
இஸ்ரேலில் இருந்து அழிந்த பழங்குடி யூத இனத்தினர் என கூறப்படும் இந்திய சமூகம் ஒன்றை இஸ்ரேலில் குடியேற அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி இந்த இனத்தைச் சேர்ந்த 50 பேர் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலை சென்றடைந்தனர்.

ஏற்கனவே தம்மை தொலைத்த யூதப் பழங்குடியினர் என கூறும் 1,700 பேர் கடந்த தசாப்தத்தில் இஸ்ரேலில் குடியேறியுள்ளனர். எனினும் இந்த இனத்தினருக்கு விசா வழங்குவதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்ரேல் அரசு நிறுத்தியது. இந்நிலையில் அந்த கொள்கையில் அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது.
விவிலியத்தில் கூறப்படுகின்ற ஒரு புராதன காலகட்டத்தில் இஸ்ரேலில் இருந்ததாகக் கூறப்படும் பினாய் மெனெசா என்னும் இந்த சமூகத்தினர் குகி-சின் மிஷோ என்னும் யூத பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் தாம் என்று நம்புகிறார்கள். இப்படியாக அந்தக் காலகட்டத்தில் அங்கு 10 பழங்குடியினங்கள் இருந்ததாகக் கூறப்படுகின்றது.
விவிலியத்தில் கூறப்பட்டிருப்பதன்படி கி. மு. 721 ஆம் ஆண்டில் அசிரியர்களின் ஆக்கிரமிப்பின் போது இவர்கள் அங்கிருந்து துரத்தப்பட்டார்கள் என்று கருதப்படுகிறது.
தற்போது இஸ்ரேலின் அனுமதிபெற்று இந்த 50 பேரும் அங்கு சென்று சேர்ந்திருக்கிறார்கள். இந்த சமூகத்தைச் சேர்ந்த சுமார் 7200 பேர் தற்போது இந்தியாவில் பர்மிய எல்லையின் ஓரமாக மிஷோராம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் வாழ்கிறார்கள். இவர்களும் படிப்படியாக இஸ்ரேலை சென்று சேர்வார்கள்.
இவ்வளவு ஆர்வமாக இவர்கள் இஸ்ரேலுக்கு போனாலும் இவர்கள் யூதர்கள் என்பதை அனைத்து இஸ்ரேலியர்களும் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று கூறிவிடமுடியாது.
யூத மதத்துக்கும் இவர்களுக்கும் தொடர்பில்லை என்றும் இஸ்ரேலிய குடியேற்றக்காரர்கள் மேற்குக் கரையில் தமது இருப்பை பலப்படுத்த இவர்களை பயன்படுத்துகிறார்கள் என்றும் முன்னாள் உள்துறை அமைச்சரான அவ்ரகம் போரஸ் கூறியுள்ளார்.


(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE