இஸ்ரேல் உள்துறை அமைச்சு இந்த சட்டவிரோத குடியிருப்புகளை அமைக்க கடந்த திங்கட்கிழமை பின்னேரம் அனுமதி அளித்துள்ளது.
ஜெரூசலம் மாவட்ட திட்டமிடல் குழுவுடனான சந்திப்பின் போதே கிழக்கு ஜெரூசலத்தின் ஷிலோ பகுதியில் இந்த வீடுகளை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஷிலோ பகுதி பலஸ்தீன நகரான பெத்லஹேமுக்கு அருகில் அமைந்துள்ளது.
இதன்படி கடந்த 7 தினங்களுக்குள் கிழக்கு ஜெரூசலத்தில் 5,350 புதிய குடியிருப்புகளை அமைக்க இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது என்று யூதக் குடியிருப்புகள் குறித்து கண்காணிப்பில் ஈடுபடும் டானியல் செயிட்மன் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு யுத்தத்தின் போது கிழக்கு ஜெரூசலத்தை ஆக்கிரமித்தது. அன்று தொடக்கம் அங்கு சர்வதேச சட்டங்களை மீறி குடியிருப்புகளை அமைத்து வருகிறது.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.