யாழ். பல்கலைக்கழக விவகாரம்
புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்றுவரும் நான்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் நிறைவு பெற்றதும் அவர்கள் விடுவிக் கப்படுவார்கள் என யாழ். இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க நேற்றுத் தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், விரிவுரையாளர்கள், குறித்த நான்கு மாணவர்களின் பெற்றோர், கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட மாண வர்கள் ஆகியோரை பலாலி இராணுவத் தலைமையகத் தில் நேற்று முற்பகல் சந் தித்தபோதே யாழ். இராணுவ கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க இவ்வாறு கூறினார். கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களில் நால்வர் விடு விக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் சில ரின் தூண்டுதல்களாலேயே தாம் அவ் வாறான நடவடிக்கையில் ஈடுபட்ட தாக அவர்கள் கூறினர். அதனால் அவ ர்கள் விடுவிக்கப்பட்டனர். தடைசெய் யப்பட்ட இயக்கமொன்றுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே அவர்கள் உள்ளனர். அவர்களின் மனோநிலையில் மாற்றம் ஏற்படுவது அவசியம். அதுவரை அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படும்.
சில அரசியல்வாதிகளின் தூண்டுதல்களாலேயே மாணவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இவ்வாறான அரசியல்வாதிகளின் தூண்டுதல்களுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பலியாகக் கூடாது என்றும் மஹிந்த ஹத்துருசிங்க கூறினார்.
யாழ். பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் மீண்டும் வழமைக்குத் திரும்பினால் அம்மாணவர்களை விடுவிப்பது பற்றி உயரதிகாரிகளுடன் கலந்துரையாட முடியும். எனவே, கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்குமாறும் அவர் ஆலோசனை வழங்கினார்.
புனர்வாழ்வு பெறும் மாணவர்களில் மனமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பெற்றோர் முயற்சித்தால் விரைவில் அது அவர்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் யாழ் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க கூறினார்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.