எங்காவது தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பின் புதிய கட்சிகளை பதிவு செய்யமுடியாது என்பது சட்டமாகும். முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்புக்கான உள்ளுராட்சிமன்ற தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமைய அந்த இரண்டு சபைகளுக்குமான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நீண்டகாலமாக இவ்விரு சபைகளுக்குமான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் புதிய கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்கமுடியுமா? என்பது தொடர்பில் தேர்தல்கள் திணைக்களம் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்டுள்ளது என்று தேர்தல்கள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் எம்.எம் மொஹமட் தெரிவித்தார்.
இலங்கையில் தற்போது 64 பதிவு செய்யப்பட்டுள்ளன. உரிய நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத 84 கட்சிகளின் புதிய பதிவுக்கான விண்ணப்பங்களை தேர்தல் திணைக்களம் நிராகரித்தது.
பல்வேறு நிபந்தனைகளுடன் குறைந்தபட்சம் நான்கு வருடங்களாவது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை அக்கடசிகள் நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.