டொலர் தாள்களைச் செலவிட்டு சிலர் நாடுகளின் வரலாற்றை அழிப்பதற்கு தயாராகியுள்ளதால் எமது வரலாற்று ஆவணங்களை மிகவும் கவனமாகப் பேணிப் பாதுகாப்பது அவசியம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுத் தெரிவித்தார்.
ஆவணங்களை விடவும் பணத் தாள்களின் துணை கொண்டு வரலாற்றை அளவிடத் தயாராகும் யுகம் உருவாகியுள்ளது. ஆயினும் சொத்துக்களைச் சேர்த்தாலும், அதிகாரத்தைக் கட்டியெழுப்பினாலும் நாடொன்றின் வரலாற்றை ஒரு போதும் கட்டியெழுப்ப முடியாது என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
தேசிய சுவடிகள் திணைக்களத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ்வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இற்றைக்குப் பத்து வருடங்களுக்கு முன்பிருந்து இவ்வாறான வசதி கொண்ட கட்டடம் தேசிய சுவடிகள் திணைக்களத்திற்கு அவசியமாக இருந்தது என்பதை பணிப்பாளர் குறிப்பிட்டார். அத்தோடு இதற்கான திட்டமும் 1996 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். என்றாலும் அதற்குத் தேவையான நிதியொதுக்கீடு அன்று கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். என்றாலும் நாம் இவ்விடயத்தைக் கவனத்தில் எடுத்து இப்புதிய கட்டடத்தைத் தேசிய சுவடிகள் திணைக்களத்திற்குப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம்.
தேசிய அரும்பொருட் காட்சியகத்தைப் போன்று சுவடிகள் திணைக்களமும் ஒரு நாட்டிலுள்ள மிக முக்கியமான இடமாகும் என நான் நம்புகின்றேன். ஒரு யுகத்தில் வித்தியோதய பல்கலைக் கழகத்தில் சுவடிகள் கட்டடம் இருந்தது என்பது எனக்கு நினைவு இருக்கின்றது. நானும் அந்த நூலகத்தில் கடமையாற்றி யுள்ளேன். நான் பழைய கவிதைகளையும், தேர்தல்கால கவிதைகளையும், ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் ஆளை ஆள்விமர்சித்து எழுதிய கவிதைகளையும் சேர்த்து வைத்திருந்தேன். ஆளை ஆள் விமர்சித்து கவிதைகள் விநியோகிக்கப்பட்ட ஒரு யுகம் இருந்தது. அத்தோடு பத்திரிகைகளும் அச்சிட்டு வெளியிடப் பட்டதும் எனக்கு நினைவிருக்கின்றது. இவை என்னிடமிருந்தால் அழிந்து விடும் எனக் கருதி, நான் சேர்த்து வைத்திருந்தவற்றை வித்தியோதய சுவடிக் கூடத்திடம் ஒப்படைத்தேன்.
இங்குள்ள சுவடி ஆவணங்களை ஒவ்வொன்றாக விரித்து வைத்து பார்த்தால் அவற்றின் நீளம் 22 கிலோ மீற்றர்களாக விளங்கும் என எமது பணிப்பாளர் குறிப்பிட்டார். எமது வரலாற்றை எடுத் துப் பார்த்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. அதேநேரம் ஒல்லாந்தர் யுகம், பிரித்தானியர் யுகம் போன்ற அந்தந்த யுகங்களில் அரச ஆவணங்கள், காணிகள், குடும்பங்கள் மற்றும் பாடசாலைகளின் சொத்துரிமைகள், உத்தியோகபூர்வப் புத்தகங்கள், ஹன்சார்ட் அறிக்கைகள், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பத்திரிகைகள், வர்த்தமானி அறிவித்தல்கள், நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளின் ஆவணங்கள் புத்தகங்கள் போன்றன இங்கிருப்பதை நாமறிவோம். அதேநேரம் எல்லாவற்றினதும் முதல் பிரதியை இங்கு அனுப்ப வேண்டும் என்று ஒரு சட்டமும் உள்ளது. எனினும் இன்று அப்பொறுப்பு உரிய முறையில் நிறைவேற்றப்படுகின்றதா என்பது குறித்து சந்தேகமுள்ளது. அதேநேரம் எமது திணைக்களங்களில் பெரிய குறைபாடு உள்ளது. 2005 ஆம் ஆண்டு முதல் புலிப் பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் முடிவுகள் தொடர்பான தகவல்கள் எமக்கு இன்னும் மீண்டும் கிடைக்கப் பெறாதுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்யும் இளம் பராயத்தினர் நன்மை பெறும் வகையில் அவற்றைப் பாதுகாத்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கூற வேண்டியுள்ளது. வரலாற்றை ஆவணப்படு த்துவது எமது தேசத்தின் வழக்கமாகும். இது உலகின் எந்தவொரு நாட்டிலும் இல்லாத ஒரு பழக்கம்.
1800 களில், இந்தியாவுக்கு அசோக்க சக்கரவர்த்தி யார் என்பதை நாம் பாதுகாத்து வைத்திருந்த ஆவணங்கள் மூலமே கண்டறிய முடிந்ததாக குறிப்பிடப்படுகின்றது. அது இந்தியாவுக்கு நன்மை பயத்தது. அன்று அவை எமது விகாரைகளில் பாதுகாத்து வைக்கப்பட்டி ருந்தது. ஏடுகளில் பிய தஸ் என்ற மன்னர் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பெரிய சக்கரவர்த்தி குறித்த தகவல்களை அறிந்து கொள்ள இந்தியாவிடம் தெளிவான ஆவணமொன்று இருக்கவில்லை. ஆனால் அது தொடர்பான தெளிவான ஆவணம் எம்மிடமிருந்தது. அதனை ஒரு பாரம்பரியமாக நாம் செய்து வந்திருக்கின் றோம். இதனை நாம் ஒரு புறம் எமது தேசிய மரபுரிமையை நாம் பாதுகாத்ததாகவே நம்புகின்றோம்.
துட்டுகெமுனு மன்னரின் சரித்திரம் மறக்கப்பட்டிருந்த ஒரு யுகம் இருந்தது. துட்டுகெமுனு என்ற பெயர் உச்சரிக்கப் பட்டால் இனவாதி என முத்திரை குத்தப்படுவோம் எனச் சிலர் அஞ்சினர். அப்படியான யுகத்தைக் கடந்து நாம் வந்துள்ளோம். அவர்கள் எதை செய்தாலும் இவற்றை மக்களுக்கு மீளப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு எம்மிடமுள்ளது. எமது வரலாறு குறித்து எமக்கு பெருமை ப்பட முடியும். எமது மன்னர்கள் குறித் தும் எமக்குப் பெருமைப்பட முடியும். அவற்றை நாம் பாதுகாத்துள்ளோம். அவர்கள் தொடர்பாக எழுதப்பட்டுள்ள புத்தகங்களையும் ஏனைய ஆவணங்களையும் பாதுகாத்த தேசம் என்ற வகையில் எம்மால் பெருமைப்பட முடியும் என நம்புகின்றேன். இன்று சில பிரதேசங்களின் வரலாற்றை அழித்துவிட சிலர் முயற்சி செய்வதை நாமறிவோம். தொல் பொருட்களை அழிக்கின்றார்கள். ஆனால் அவற்றின் மூலம் எமது வரலாற்றை அழிக்க முடியாது. அது பேரழிவாகவே அமையும். அவை நாடொன்றின் மரபுரிமை, விடயங்கள் அவை நாம் பாதுகாத்தவைகள் என்றும் கூறினார்.
இந்நிகழ்வின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தந்தையாரும், முன்னாள் அமைச்சருமான மறைந்த டீ.ஏ. ராஜபக்ஷ அவர்களின் புகைப்படங்கள் அடங்கிய நூல் ஜனாதிபதியிடம் கையளி க்கப்பட்டதுடன் இந்நிகழ்வின் நினைவு மலர் மற்றும் இருவட்டு என்பனவும் ஜனாதிபதியிடம் கையளித்து வெளியிட்டு வைக்கப்பட்டன. அத்தோடு மரபுரிமை அமைச்சர் கலாநிதி ஜகத் பாலசூரிய நினைவுச் சின்னம் வழங்கி ஜனாதிபதியை கெளரவித்தார். இவ்வைபவ த்தில் அமைச்சர்கள் கலாநிதி ஜகத் பாலசூரிய, ஏ.எச்.எம். பெளஸி, மஹிந்த யாப்பா அபேவர்தன உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.