......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 16 December 2012

உலகம் அழியபோவதாக வதந்தி பரப்பியோர் கைது

இந்த மாதம் 21 ஆம் திகதியுடன் உலகம் அழியப்போகிறது என்று ஆருடம் சொல்வதற்காக சீனாவின் பல்வேறு ஊர்களில் பொதுச் சதுக்கங்களில் கூடியவர்கள் சிலரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.


நாட்டின் மத்தியப் பகுதியிலும் மேற்கு மாகாணங்களிலும் பல இடங்களில் உலகம் அழியப்போகிறது என்று நம்பும் பிரிவினர் கூடினார்கள் என்றும் பொலிசார் இவர்களைக் கலைத்துள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

மாயா என்ற அழிந்துபோன அமெரிக்க நாகரிகத்தின் ஆரூடத்தின்படி இந்த மாதம் உலகம் அழியும் என்று இந்தப் பிரிவினர் நம்பி இணையத்தில் எச்சரிக்கைகளைப் பரப்பிவருகின்ரனர்.

உலகம் அழியபோவதாக ஹொங்கொங்கிலும் வதந்தி பரப்பிய 57 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

இந்த விடயம் சீனாவில் மட்டுமல்லாது வேறு பல நாடுகளிலும் அச்சத்;தை உருவாக்கியுள்ளது. இது தொடர்பான அடிப்படையற்ற தகவல்கள் இணையத்திலும் வேகமாக பரவி வருகின்றன என்றும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE