......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 1 December 2012

இந்தியாவின் முன்னாள் பிரதமர் குஜ்ரால் இன்று காலமானார்

இந்தியாவின் முன்னாள் பிரதமர்களில் ஒருவரான ஐ.கே. குஜ்ரால் இன்று காலமானார். 


உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐ.கே. குஜ்ரால் இறக்கும் போது அவரின் வயது 92. 

இந்தியாவின் 12 ஆவது பிரதமரான குஜ்ரால் அவர் 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 1998 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை பதவி வகித்தார்.

1919-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி பிறந்த பஞ்சாப்பின் ஜீலம் பகுதி ஐ.கே.குஜ்ரால், 1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்றவர்.

ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றிய ஐ.கே. குஜ்ரால், 1975-ல் அதாவது எமர்ஜென்சி அறிவிக்கப்படும்போது தகவல்தொடர்பு மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்தவர் குஜ்ரால், பின்னர் சோவியத் யூனியனுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டார்.

1980களில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஜனதா தளத்தில் இணைந்தார். 1989-ல் பஞ்சாப்பின் ஜலந்தர் எம்.பி. தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வி.பி.சிங் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். 1996-ம் ஆண்டு தேவகவுடா அமைச்சரவையிலும் வெளியுறவுத்துறை அமைச்சரானார். அதன் பின்னர் ஐக்கிய முன்னணியின் தலைவராக ஐ.கே. குஜ்ரால் தேர்வு செய்யப்பட்டு 13 மாதங்கள் நாட்டின் 12-வது பிரதமராக பதவி வகித்தார்.

பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த குஜ்ராலுக்கு அண்மையில் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லியை அடுத்த குர்கானில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்தது. இந்நிலையில் இன்று மாலை 3.27 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE