பிரதம நீதியரசரை பதவி நீக்குவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியை கண்டித்து ஒரு மணிநேர எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள நிறைவேற்று அதிகார குழு தீர்மானித்துள்ளதாக சட்ட நட்புக் கழகத்தின் கொள்கை வகுப்பு அமைப்பான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் விஜேதாஸ ராஜபக்ஷ கூறினார்.
இந்த எதிர்ப்பு நடவடிக்கை எதிர்வரும் 12 ஆம் திகதி காலை 9 மணிமுதல் 10 மணிவரை ஒரு மணிநேரத்திற்கு நாடளாவிய ரீதியில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
'பிரதம நீதியரசருக்கு இயற்கை நீதி மறுக்கப்பட்டுள்ளது, பதவி விலக்கல் செயன்முறை அநீதியானது நீதித்துறையின் தலைவியை நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் சிலர் மரியாதையீனமாக நடத்தியதையும் கண்டிக்கின்றோம்' என அவர் கூறினார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடந்திய விசேட கூட்டமொன்றில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையின் புதிய பிரதம நீதியரசர் நியமனத்தை அங்கீகரிக்க வேண்டாமென ஐக்கிய நாடுகள், பொதுநலவாய அமைப்பு, சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் போன்ற சர்வதேச அமைப்புகளிடம் கோருவதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
(சுஸித்த ஆர் பெர்ணான்டோ)
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.