......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Wednesday, 26 December 2012
பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கம் தமிழ் கூட்டமைப்புக்கு இல்லை!
தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்காக கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் ஆளும் கட்சியினால் அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறாமல் இருப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு காலத்துக்கு காலம் ஒவ்வொரு காரணங்களைக் கூறிக் கொண்டிருக்கும்.
அவர்களுக்கு உண்மையில் இந்தப் பிரச்சினையை தீர்க்கும் நோக்கம் இல்லை என்று ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினை விவகாரத்தை தீர்க்கப்படாத பிரச்சினையாக பேணுவதே கூட்டமைப்பின் நோக்கமாகவுள்ளது. இந்தவிடயத்தில் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் வதத்திலேயே அவர்கள் செயற்பட்டு வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசியப்பிரச்சினையை ஆராயும் நோக்கில் ஆளம் கட்சியினரால் பிரேரிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவில் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்றும் முயற்சியாகவே இதனை நாங்கள் பார்க்கிறோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ள கருத்துக்கு பதிலளிக்கும் விதத்திலேயே தினேஷ் குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.