மகேஸ்வரன் பிரசாத்
* உயிரை மதியாமல் கடத்தல்காரர்களின் சதியில் சிக்காதீர்கள்:
* எவருக்கும் சலுகைகள் இல்லை
அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப்கார்
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகுகள் மூலம் செல்பவர்கள் 72 மணித்தியாலங்களுக்குள் அவர்களுடைய சொந்த நாடுகளுக்குத் திருப்பியனுப் பப்படுவார்கள் என அவுஸ்திரே லியாவின் வெளிவிவகார அமைச்சர் பொப் கார் நேற்றுத் தெரிவித்தார்.
ஆட்கடத்தல்காரர்களின் சதிகளுக்கு ஏமாந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்கு இலங்கையர்கள் முயற்சிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர், நேற்று கொழும்பு வெளிவிவகார அமைச்சில் நடத்திய இணைந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர், அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் எவரும் 72 மணித்தியாலங்களுக்குள் அவர்களுடைய சொந்த நாடுகளுக்குத் திருப்பியனுப்பிவைக்கப்படுவர்.
எனவே, வீணாக பணத்தைச் செலவுசெய்து, உயிரைப் பணயம் வைத்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சிக்க வேண்டாம். கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் இதுவரை 800 இலங்கையர்கள் அவுஸ்திரேலியா விலிருந்து திருப்பியனுப் பப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக வரு பவர்கள் இவ்வாறு தொடர்ந்தும் திருப்பி அனுப்பிவைக்கப் படுவார்கள்.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்களுக்கு அங்கு எந்தவிதமான விசேட சலுகைகளும் வழங்கப்படாது. அவர்கள் திருப்பியனுப்பப்படுவார்கள். ஆட்கடத்தல்காரர்களின் சதி வலைகளில் சிக்க வேண்டாம். சட்டவிரோதமாக படகு கள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வரும் பெரும்பாலானவர்கள் பலர் கூடுதல் பணம் ஈட்டுவதற்காகவே வருவதாகக் கூறுகின்றனர். அவ்வாறு சட்டவிரோதமாக வருபவர்கள் அங்கு எவ்வித பணத்தையும் ஈட்டமுடியாது.
சட்டவிரோத அவுஸ்திரேலிய பயணங் களைத் தடுப்பது குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் சம்பந் தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடியுள் ளேன். இரு நாட்டு அரசாங்கங்களும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு இணைந்து செயற்பட இணங்கியுள்ளன. இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கத்துடன் நாம் தொடர்ந் தும் இணைந்து செயற்படுவோம்.
அதேநேரம், இலங்கைக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் பல்வேறு வழிகளில் உதவி களைப் புரிந்துள்ளது. குறிப்பாக கல்வித் துறையில் கூடுதல் கவனம் செலுத்தியுள் ளோம். உயர்கல்வியைத் தொடரவிரும்பும் இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா வந்து கல்வியைத் தொடர ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்றார்.
இது மட்டுமன்றி அவுஸ்திரேலியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மீண்டும் பலப்படுத்தப்பட்டுள்ளன. அவுஸ்திரேலிய வர்த்தகர்களுக்கு இலங்கை யில் முதலீடுகளைச் செய்வதற்கான வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.