By Hafeez
பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகள் என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்ற திருடனை, 70 வயதுப் பாட்டி ஒருவர் பின் தொடர்ந்து மடக்கிப் பிடித்த சம்பவம் கட்டுகஸ்தோட்டைப் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
கட்டுகஸ்தோட்டை ஹல்லொழுவ பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து பணம் மற்றும் மூன்று கையடக்க தொலைபேசிகளை கொள்ளையடித்துச் சென்ற சந்தேக நபரையே குறித்த மூதாட்டி மடக்கிப்பிடித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிலுள்ள ஹல்லொழுவ பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில், ஒருவர் தனது தொலைபேசிக்கு 50 ரூபாய் ‘ரீலோட’; (மீள் நிரப்பும்படி) செய்யுமாறு கேட்டுள்ளார்.
இதன்போது அங்கிருந்த 70 வயதுடைய பாட்டி ஒருவர் தொலைபேசியின் இலக்கத்தை எழுதிக்கொண்டிருந்த போது சந்தேக நபர் ஒரு தொகை பணம் மற்றும் மூன்று கையடக்க தொலைபேசிகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளார்.
இதனையடுத்து அவரை பின் தொடர்ந்து குறித்த பாட்டி சந்தேக நபரை மடக்கி பிரதேச வாசிகளின் உதவியுடன் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
(veerakesari)

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.