மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை இலங்கைக்கு வருகைதந்த அவர் கொழும்பில் நேற்று நடந்த விசேட வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொள்ளுப்பிட்டி சாந்த அந்தோனி மகளிர் வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கல்வித்துறையை மேம்படுத்துவதற்கு முதலீடுகள் அத்தியாவசியமானதாகும். அந்தவகையில் எமது அரசாங்கம் இலங்கைக்கு 4590 மில்லியன் ரூபாவை கல்விக்காக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை கல்வித்துறையை மேம்படுத்தும் வகையிலேயே இந்த நிதியை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், மனிதக் கடத்தலை கட்டுப்படுத்துவது, சுற்றுலாத்துறை மற்றும் வர்த்தக உறவுகள் ஆகியவை தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.
தெற்கு ஆசியாவுக்கான விஜயத்தை முதல் தடவையாக மேற்கொள்ளவுள்ள இவர், இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உதவி குறித்தும் முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
இவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.