......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 30 December 2012

4000 மாணவரின் எதிர்கால கல்வி கேள்விக்குறி நிலையில்!


குறுகிய அரசியல்வாதிகள் சிலரின் செயலினால்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவலை
குறுகிய எண்ணம் கொண்ட சில அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பேரி லேயே பல்கலைக்கழகத்தில் தீபமேற் பட்டதேயல்லாது உண்மையில் இறந் தவர்களை நினைவுகூர்ந்து அங்கு தீபமேற்றப்படவில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ் சாட்டினார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இறந்தவர்களுக்கு தீபமேற்ற தடையில்லை. தடை விதிக்கவும் முடியாதென்று சுட்டிக்காட்டிய அமைச்சர், திட்டமிட்ட நோக்கத்துடன், குழப்பங்களை செய்துவிட்ட சிலர் நான்காயிரம் மாணவர்களின் கல்வியை குழப்பி விட்டார்கள் என்றும் கூறினார்.
சுதந்திரமாகவும், சமாதானமாகவும் நடமாடவும் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் கூடிய இந்தக் காலத்தில், மாணவர்களின் கல்வியை தடைசெய்ய எண்ணுகின்றார்கள். இவ்வாறான வேலை களுக்கு அரசாங்கம் ஒரு போதும் இட மளிக்காது என அவர் கூறினார். ஆரம்பத்தில் கை ஏந்த வைத்தவர்கள் இன்றுவரை கைஏந்த வைக்க நினைக்கின்றார்கள். ஆனால், இந்த காலம் மாறிவிட்டது. தவறான அர்த்தத்தினை வெளிப்படுத்தி, குழப்பத்தினை ஏற்படுத்தி யுள்ளார்கள். என்னிடம் கூறியிருந்தால் நான் அமைதி கிடைக்கும் வகையில் குழப்பத்தினை சுமூகமான நிலைக்கு கொண்டு வந்திருப்பேன் என அமைச்சர் மேலும் கூறினார்.



(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE