......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 5 December 2012

பிரதமர், துமிந்த எம்.பி.க்கு 3 மாத லீவு

பிரதமர் டி.எம்.ஜயரட்னவுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கும் மேலும் 3 மாத  லீவு வழங்குவதற்கு  நாடாளுமன்றம் இன்று  அங்கீகாரமளித்துள்ளது. 


டிசெம்பர் மாதம் 22ஆம் திகதியிலிருந்து 3 மாத லீவு இவர்கள் இருவருக்கும் வழங்கப்படுகின்றது.  

முல்லேரியா துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்  காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, சிங்கப்பூரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவருகின்றார். இந்த நிலையில், இவருக்கு நாடாளுமன்றம் தொடர்ந்து லீவு வழங்கிவருகின்றது. 

இதேவேளை, அமெரிக்காவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த பிரதமர் டி.எம்.ஜயரட்ன கடந்த வாரம் நாடு திரும்பினார். 

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுமார் 3 மாதங்களுக்கும் மேலாக நாடாளுமன்றத்திற்கு வருகை தராதுவிடின் அவர் நாடாளுமன்றத்திற்கு வருகை தராது இருப்பதற்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளாதுவிடின், 3 மாதங்களின் பின்னர் அவர் தனது ஆசனத்தை இழக்க நேரிடும்.  


(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE