20 வருடங்களுக்கு முன்னர் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டிற்குள்ளான நபரொருவரை கம்புறுபிட்டிய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
1992ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி 14 வயதுடைய பாடசாலை மாணவியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர்பில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டிருந்தார். மாவட்ட நீதிமன்றில் சந்தேக நபரை ஆஜர்படுத்தியபோது அவருக்கு பிணை வழங்கப்பட்டது. பிணையில் வெளியே வந்த குறித்த சந்தேக நபர் தலைமறைவாகிவிட்டார்.
அச்சமயத்தில் இச்சந்தேக நபர் 18 வயதுடைய வாலிபராக இருந்தார். குற்றவாளியாக இனங்காணப்பட்ட குறித்த நபருக்கு மாத்தறை உயர் நீதிமன்றம் 15 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 25 ஆயிரம் ரூபா தண்டமும் விதித்து தீர்ப்பளித்தது.
பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட குறித்த நபர் தலைமறைவாகியதால் அவரை கண்ட இடத்தில் கைதுசெய்யுமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இருந்தபோதிலும் குறித்த குற்றவாளியை கண்டு பிடிப்பதில் பாரிய சிக்கலை பொலிஸார் எதிர்கொண்டனர். இறுதியாக 20 வருடங்களின் பின்னர் கனன்கேயில் தனது மனைவியுடன் வசித்துவந்த நிலையில் கம்புறுபிட்டிய பொலிஸார் அவரை கைதுசெய்துள்ளனர்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.