......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 10 December 2012

கியோட்டோ உடன்படிக்கை 2020 வரை நீடிப்பு


யோட்டோ உடன்படிக்கையின் வாழ்நாளை 2020 ஆம் ஆண்டு வரை நீடிக்க பருவநிலை மாற்றத்துக்கான ஐ. நா. மாநாடு சனிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.

தொழிற்சாலைகள் வெளியிடும் காபனீரொட்சைட் உள்ளிட்ட வாயுக்கள் மூலம் பூமி வெப்பமயமாவதைத் தடுப்பதற்காக வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த உடன்படிக்கை கடந்த 1997ல் உருவாக்கப்பட்டது. இது பணக்கார நாடுகளின் பசுமைக்குடியில் வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வகை செய்கிறது. இது இந்த ஆண்டு இறுதியுடன் காலாவதியாகி இருந்தது.
இந்நிலையில் பருவநிலை மாற்றத்துக்கான ஐ.நா. மாநாடு மற்றும் கியோட்டோ உடன்படிக்கை தொடர்பான 8 வது மாநாடு கட்டார் தலைநகர் டோஹாவில் நவம்பர் 26ஆம் திகதி தொடங்கியது.
12 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாடு வெள்ளிக்கிழமையுடன் முடிந்தது.
இதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. குறிப்பாக முக்கியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என விமர்சனம் எழுந்தது. இதையடுத்து சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், கியோட்டோ உடன்படிக்கையின் வாழ்நாளை 2020 ஆம் ஆண்டு வரை நீடிக்க மாநாட்டில் ஒப்புதல் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.


(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE