அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் நாடு தழுவிய ரீதியில் புதனன்று 19 ஆம் திகதி 24 மணித்தியாலய அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளும்.
உயிர்பாதுகாப்பு சேவைகள், அத்தியாவசிய சேவைகள், அதிதீவிர சிகிச்சை கண்காணிப்புச் சேவைகள், அவசர சத்திர சிகிச்சைகள் ஆகியவற்றுக்குப் பெரும் பாதிப்புக்கள் ஏற்படா வண்ணம் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும்.
லேடி ரிட்ஜ்வே சிறுவர் ஆஸ்பத்திரி காசல் வீதி பிரசார ஆஸ்பத்திரி, டி சொய்ஸா பிரசவ ஆஸ்பத்திரி ஆகியவற்றின் மனிதாபிமானத்தின் பேரில் வேலை நிறுத்தம் நடைபெறமாட்டாது.
600 சுகாதார நிலையங்களில் 25,000 தாதி மார் வேலை நிறுத்தங்களில் பங்கு கொள்வர்.
தமது தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அதிகாரிகள் செயற்படுவார் களானால், வேலை நிறுத்தம் தொடர்பாக மீண்டும் சிந்தித்துப் பார்க்கலாமென சங்கத் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.