2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரையிலேயே 158 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் இரண்டு தற்கொலைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. வீதி விபத்துக்களினால் 16 உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன. இதேவேளை, தங்களது வேலைத்தலங்களில் தொழிற்துறை ஆபத்துக்களினால் 20 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற தனது அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதில் பெண்களுக்கு உள்ள ஆர்வத்தை குறைப்பது அரசாங்கத்தின் கொள்கையாகும். இதற்கு பதிலாக, பயிற்சி பெற்ற தொழிலாளர்களை நாம் அனுப்ப வேண்டும். வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்புத் தேடி செல்லும் பெண்களின் வயதெல்லையை 20 ஆக அதிகரித்துள்ளோம். இன்னும் சில வருடங்களில் இந்த வயதெல்லையை மேலும் அதிகரிக்க நாம் எண்ணுகின்றோம் என்றார். (கெலும் பண்டார, யொஹான் பெரேரா)
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.