நோபல் விருது வென்ற முர்ரே ஆறு தசாப்தங்களுக்கு முன் முதல் உறுப்பு மாற்று சத்திர சிகிச்சை மேற்கொண்ட அதே பொஸ்டன் மருத்துவமனையில் வைத்து நேற்று முன்தினம் காலமானார். கடந்த 1954 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரட்டைச் சகோதரர்களுக்கு இடையில் முதல் முறையாக சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மேற்கொண்டு முர்ரே வரலாறு படைத்தார்.
இரண்டாவது உலக மகா யுத்தத்தின்போது எரிகாயங்களுக்கு உள்ளான வீரர்களு க்கு மாற்றுத் தோல்களை பொருத்தி வெற்றி கண்ட முர்ரே உறுப்பு மாற்று சத்திர சிகிச்சைசக்கான சோதனைகளை மேற்கொண்டார். இதன்படி அவர் நாயொன்றுக்கு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மேற்கொண்டு வெற்றி கண்டார்.
இதனைத் தொடர்ந்து சிறுநீரகங்கள் செயலிழந்த 23 வயதான ரிச்சட் என்பவருக்கு அவரது இரட்டைச் சகோதரரான ரொனால்ட் ஹரிக்கின் சிறு நீரகம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இந்த சத்திர சிகிச்சைக்கு பின் ரிச்சட் 8 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். பின்னர் 1962 ஆம் ஆண்டு இரத்த உறவு இல்லாத இருவருக்கு இடையில் முதல்முறை உறுப்பு மாற்று சத்திர சிகிச்சை மேற்கொண்டு வெற்றி கண்டார்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.