......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 28 November 2012

விசித்திர பூஜையில் சிறுமி பலி; தம்பதியினர் கைது

விசித்திர பூஜையொன்றின் போது சாமி உரு ஏறப்பட்ட தம்பதியினர், 15 வயது சிறுமியொருவரின் தொண்டைக்குள் கத்தியொன்றைச் செலுத்தியதில் அச்சிறுமி உயிரிழந்த சம்பவமொன்று தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 


இதேவேளை, 7 வயது சிறுமியொருவரை தீயிலிடவும் மேற்படி தம்பதியினர் முயற்சித்த நிலையில், அச்சிறுமி தீக்காயங்களுக்கு உள்ளாகி தெஹியத்தகண்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அத்துடன், 19 வயதுடைய இளைஞர் ஒருவரும் இந்த பூஜையின் போது காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற மேற்படி சம்பவத்தை அடுத்து குறித்த தம்பதியினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹியத்தகண்டிய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE