......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 29 November 2012

பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு


பிரதம நீதியரசர் மீதான குற்றப் பிரேரணையை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றப் பிரேரணையை விசாரிக்கும் தகுதி பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு இல்லை என தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளான நிமல் காமினி அமரதுங்க, கே. ஸ்ரீபவன் உள்ளிட்ட மூன்று நீதியரசர்கள் குழு முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு அரசியல் யாப்பின் 107 வது சரத்தின்படி உயர் நீதிமன்றின் வியாக்கியானத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதென நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அது குறித்த விபரங்கள் உச்ச நீதிமன்றை வந்தடைந்துள்ளதா இல்லையா என உறுதிப்படுத்தப்படாத நிலையில் மனு மீதான விசாரணைகள் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE