இவரது சிறைக்காலம் முடிந்தவுடன் இவரை நாடு கடத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் பணித்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டவர் தனது வீட்டில் 12 வருடங்கள் வேலை செய்ததாகவும் செப்டெம்பர் மாதம் 10 இல் 4000 தினார் காணாமல் போனதாகவும் வீட்டின் உரிமையாளரான ஆசிரியை முறையிட்டதை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டார்.
"அடுத்த வீட்டில் வேலை செய்த பணிப்பெண் எனது பணிப்பெண்ணை பார்சல் ஒன்றை தனது வீட்டுக்கு அனுப்ப உதவும்படி கேட்டார். உதவுவது போல நடித்துக்கொண்டிருந்த சந்தேக நபர் சில பொருட்களை அந்த பொதியில் வைத்தார்.
சந்தேகம் கொண்டு அதை சோதித்தபோது காணாமல் போன பணமும் எனது ஆடைகளும் காணப்பட்டன. இவரை மேலும் சோதித்தபோது எனது நகைப் பெட்டியின் திறப்பை அவர் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அவர் திருடிய காப்பை என்னிடம் கொடுத்தார்" என இந்த ஆசிரியை தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.