......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 25 November 2012

பொறுமையிழந்த ஊழியர்கள்


கண்டன ஆர்ப்பாட்டம்

பல வருடங்களாக EPF, ETF இல்லை;

“எமது ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம், சேவைக்காலப்பணம் ஆகியவற்றை கொள்ளை அடிக்காதே கொள்ளை அடிக்காதே! ஏமாற்றாதே ஏமாற்றாதே! பொறுத்தது போதும் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை வைத்துதான் பொறுமையை காத்தோம்.
எமக்கு கிடைக்க வேண்டிய பணம் நாம் உயிரோடு இருக்கும்போதே கிடைக்க வேண்டும். இறந்த பின் எதற்கு?” என்று கண்டி மாவட்டத்தில் இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்திசபை எல்கடுவ பிளான்டேசன் கம்பனி ஆகியன நிருவகிக்கும் பெருந்தோட்டங் களில் வேலை செய்யும் சுமார் 700 தோட்ட உத்தியோகஸ்தர்கள் அமைதியான போராட்டம் நடத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 15.11.2012 மூன்று நிறுவனங்களிலும் வேலை செய்யும் உத்தியோகஸ்தர்கள் மாத்தளை பகுதியைச் சேர்ந்த ரத்வத்தை தோட்டத்திலிருந்து கோஷங்கள் எழுப் பியவண்ணம் பதாதைகளுடன் சுமார் 3 கிலோ மீற்றர் தூரமுள்ள உக்குவலை நகரத்திற்கு கொட்டும் மழையிலும் கால் நடையாக வந்தனர்.
இவர்கள் அனைவரும் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் அங்கத்தினர்களாவர்.
அங்கு உத்தியோகஸ் தர்கள் மத்தியில் சங்கத்தின் தலைவர் தம்பிக்க ஜயவர்தன பேசுகையில் நாங்கள் பல வருடகாலமாக சம்பந்தப்பட் டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது ஆறு மாதத்திற்குள் எல்லா கொடுப்பனவுகளும் தருகிறோம் என்று வாக்குறுதிகள் கொடுத்தபோதிலும் அவை நடைமுறைப்படுத்தப்படுவ தில்லை. இதனால் தோட்ட உத்தியோகஸ் தர்கள் கடந்த 23.10.2012 அமைதியான முறையில் கையில் கறுப்புப்பட்டி கட்டி எதிர்ப்புப் போராட்டத்துடன் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கும் நிருவாகங்கள் எந்தவிதமான பேச்சுவார்த் தைக்கும் வரவில்லை, அதன்பின் 6.11.2012 ஆண்கள் சாரமும் பெண்கள் சேலைக்கு பதிலாக மாற்று உடை அணிந்து அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE