நீதிமன்றங்கள் பிரதம நீதியரசரினால் ஆளப்படுகின்ற ஏகாதிபத்திய நிலை மாற்றப்பட வேண்டும் என தெரிவித்த அமைச்சர், மக்கள் ஆணைக்கிணங்க பிரதம நீதியரசர் நியமிக்கப்படும் நிலை உருவாக்கப்பட வேண் டும் எனவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நீதியமைச்சின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரி வித்தார். அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்: சிறைச்சாலைகளில் ஏழு இலட்சத்துக்கு மேற்பட்ட வழக்குகள் விசாரணையின்றி தேங்கிக்கிடக் கின்றன.
எனது தகப்பனாரின் வழக்கொன்று 50 வருட காலம் காலங்கடத்தப்பட்டு அண்மையில்தான் முடிவுக்கு வந்தது. எனது தாயார் அதைக் கையாண்டார். அவரும் இறந்து விட்டார். பின்னர் எனது காலத்திலேயே அந்த வழக்கு முடிவுக்கு வந்தது.
1800 ஆம் ஆண்டு காலங்களிலிருந்து வழங்குகள் தேங்கும் நிலை தொடர்கின்றன. மேலதிக நீதிமன்றங்களை அமைத்து வழக்குகளை விசாரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனினும் இந்த செயற்பாடுகள் படிப்படியாகவே சாத்தியமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.