......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 19 November 2012

கையும் களவுமாக மாட்டிக் கொண்ட பொலிஸ் உயரதிகாரி

By Kavinthan Shanmugarajah 
லஞ்சம் பெற முயற்சித்த கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி அலுத்கெதர டிகிரி பண்டார விஜேரத்ன லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகளால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.


இவருடன் அதே பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சார்ஜண்டான உபுல் வசந்த குமார என்பவரும் இதன்போது கைதாகியுள்ளார்.

குறித்த அதிகாரி கிருலப்பனை பிரதேசவாசியொருவரிடமிருந்து ஒரு இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கோரியுள்ளார்.

தங்க ஆபரணக் கடையொன்றில் கொள்ளையிடப்பட்ட நகைகளை தன்வசம் வைத்திருந்தமை தொடர்பிலான வழக்கிலிருந்து விடுவிப்பதற்காகவே அப் பொலிஸ் அதிகாரி பணத்தினைக் கேட்டுள்ளார்.

இவருக்கு இலஞ்சம் வழங்க இணங்கிய நபர் ஏற்கனவே லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புத் திணைக்களத்திற்கு இது தொடர்பில் தகவல் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் இன்று அந்நபர் பொலிஸ் நிலையத்தில் வைத்து இலஞ்சத்தொகையை வழங்கியபோது அங்கு வந்த திணைக்கள அதிகாரிகள் பொறுப்பதிகாரியையும் சார்ஜண்டையும் கையும் களவுமாக பிடித்துள்ளனர். 

இதனையடுத்து சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE