காங்கேசன்துறை ரயில் சேவை அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்க ப்படும் என்று போக்குவரத்து பிரதியமைச்சர் ரோஹண குமார திஸா நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவி த்தார். யுத்தம் காரணமாக மிக நீண்ட காலமாக நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த வட பகுதிக்கான ரயில் சேவையை வெகு விரைவில் ஆரம்பிக்க முடிந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
போக்குவரத்து அமைச்சு மீதான வரவு - செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய பிரதியமைச்சர் மேலும் உரையாற்றுகையில்:
ஆரம்ப காலத்தில் இ.போ.ச. சிறந்த சேவைகளை வழங்கி வந்தது. இ.போ.ச. துறை தனியார் மயப்படுத்தப்பட்டதன் காரணமாக அரச துறை பாரிய பின்னடை வைக் கண்டது.
கடந்த ஆட்சிக் காலத்தில் தனியார் துறைப்படுத்தப்பட்ட போக்குவரத்து துறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் மீட்டெடுக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டது.
இ.போ.ச. தற்போது 23 வகையான சேவைகளை சிறந்த முறையில் மக்களுக்காக வழங்கி வருகின்றது. அதேபோன்று மிகவும் குறுகிய காலத்தில் சிறந்த ரயில் சேவை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோன்று ரயில்வே கடவை அற்ற குறுக்கு வீதிகள் தொடர்பாக ஆராயும் பொருட்டு 15 பேர் அடங்கிய அமைச்சரவை உபகுழுவொன்று நிய மிக்கப்பட்டுள்ளது. நிலையானதும், சுதந்திரமானதுமான சேவையை வழங்குவதே எமது நோக்கமாகும். அதேபோன்று மோட்டார் போக்குவரத்து திணைக்களம் சிறந்த முறையில் மேம்படுத்தப்பட்டு நாடுமுழுவதும் அதன் சேவைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.