......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 22 November 2012

தேசத்தின் அடிப்படை சித்தாந்தமாக விளங்கும் அரசியலமைப்பை பாதுகாப்பது மக்களின் கடமை


மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் பீ.டபிள்யு.டி.சி. ஜயதிலக்க கருத்து.
மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் பதவியை ஏற்றுக் கொண்ட பின்னர் நீதியரசர் பீ.டபிள்யு.டி.சி. ஜயதிலக்க, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இம்மாதம் 14ம் திகதி நிகழ்த்திய உரையில், தாம் ஒரு சட்டத்துறை மாணவனாக இருந்த போது சட்ட விஞ்ஞானத்துறையில் சட்டஇயல் துறையில் அதிக ஆர்வம் கொண்டி ருந்ததாகவும் இதுவே சட்டத்தை உருவாக்குவதற்கு அடித்தளமாக அமைந்ததென்றும் சுட்டிக்காட்டினார்.

சட்டத்துறையில் காலத்திற்கு காலம் பூகற்பவியல் தொடர்பிலும், சமூக செயற்பாட்டின் அடிப்படையிலும் மாற்றமேற்படுகிறது. இதனை சட்ட சித்தாந்தத்தில் பல்வேறு வகையில் அடையாளம் காணக்கூடியதாக இருக் கும். சட்டக்கல்லூரிகளில் சொக்ரடீஸ், கால்மாக்ஸ் போன்ற சித்தாந்தவாதி களின் சிந்தனைக் கருத்துக்கள் கற் பிக்கப்படுகின்ற போதிலும், இவை இன்று மனித சமூகத்தில் செயல் இழந் திருக்கின்றன என்று நீதியரசர் ஜெயதிலக்க தமது உரையில் சுட்டிக்காட்டினார். சட்டத்தை பொதுவாக பார்க்குமிடத்து அதன் அடிப்படை சித்தாந்தமாக விளங்குவது ஒரு தேசத்தின் அரசியல் சாசனமாகும்.
எனவே, நாம் அனைவரும் அரசியல் சாசனத்தை பேணிப் பாதுகாக்கும் கடப்பாட்டினைக் கொண்டுள்ளோம். சமூகத்தின் தேவைகளை பேணிப் பாதுகாப்பதற்காகவே சட்டங்கள் இயற்றப்படுகின்றன என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
ட்டம் கூடிய வரை முரண்பாடுகளை குறைப்பதற்கு பயன்படுத்தப்பட வேண்டுமென்று தெரிவித்த அவர், சட்டத்திற்கு யதார்த்தபூர்வமாக விளக்கமளித்து தீர்மானம் எடுப்பது அவசியமென்றும் கூறினார். பொன்னான விதிமுறை என்ற சட்டப்பதத்திற்கு வியாக்கியானம் அளிப்பதாயின் அது சட்டத்திற்காக அல்ல சமூகத்தின் மேம்பாட்டுக்காக என்றே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் நீதியரசர் கூறினார்.
(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE