இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நாடாளுமன்றத்தில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்கும் இடமே சிற்றுண்டிச்சாலையாகும். இங்கு பன்றி இறைச்சி கறி பரிமாறப்;பட்டால் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிற்றுண்டிச்சாலையை பகிஷ்கரிப்பர்.
பன்றி இறைச்சியினால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான ஜோன் அமதுரங்க எம்.பி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை வியப்படைய செய்துள்ளது .
முஸ்லிம்களை புண்படுத்தும் செயல்களில் ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்து ஈடுபடுகின்றது. அதன் ஒரு அங்கமே இதுவாகும்.
முஸ்லிம்கள் உண்பதற்கு தடை செய்யப்பட்டுள்ள பன்றி இறைச்சியினை நாடாளுமன்றத்தில் அனுமதிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளமை இலங்கையிலுள்ள முஸ்லிம்களை அவமதிக்கும் செயலாகும்.
நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இன்று வரை பன்றி இறைச்சி நாடாளுமன்றத்தில் தடை செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இதேவேளை, பன்றி இறைச்சியினால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலைக்குள் அனுமதிக்க வேண்டாம் என கோரி அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, ரவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன் மற்றும் அதாவுல்லா உட்பட அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்ளும் கையொழுத்திட்டு சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளனர்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.