......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 29 November 2012

இருதய நோய் சிகிச்சைக்கு 9,849 நோயாளர்கள் காத்திருப்பு


லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்

சுகாதார பிரதி அமைச்சர்
தேர்ச்சி பெற்ற டொக் டர்களின் பற்றாக்குறை காரணமாக இருதய நோய் சிகிச்சைக்காக 9, 849 நோயாளர்கள் காத் திருப்போர் பட்டியலில் உள்ளனரென பிரதி சுகா தார அமைச்சர் லலித் திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரி வித்தார்.

இவர்கள் கொழும்பு, கண்டி, கராபிட்டிய, ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் லேடி ரிட்ஜ்வே போன்ற ஆஸ்பத்திரிகளில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதுடன் விரைவில் நியமிக்கப்படவுள்ள டொக்டர்களின் மூலம் இவர்களுக்கான சத்திர சிகிச்சைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, மேற்படி ஆஸ்பத்திரிகளில் 3319 பேர் இவ்வருடம் ஜனவரி முதல் ஒக்டோபர் வரை இருதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரெனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் இது தொடர்பில் பிரதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;
கொழும்பு பெரியாஸ்பத்திரி. கண்டி பெரியாஸ்பத்திரி, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை, கராபிட்டிய வைத்தியசாலை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைகளிலேயே 3319 இருதய சத்திர சிகிச்சைகள் இடம்பெற்றுள்ளதுடன் 9849 பேர் சத்திர சிகிச்சைக்காகக் காத்திருக்கின்றனர்.
இருதய சத்திர சிகிச்சைக்கான விசேட மருத்துவர்கள் பற்றாக்குறையே சத்திர சிகிச்சைகள் தாமதமாவதற்குக் காரணம் எனவும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.
(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE