லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்
சிறைச்சாலைகளில் 358 தமிழ் கைதிகள் மட்டுமே இன்னமும் தடுத்துவைக்கப்பட் டிருப்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 1600 தமிழ் கைதிகள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக் கப்பட்டுள்ளனர். எஞ்சியிருக்கும் 358 பேரும் விரைவில் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர் என் றும் கூறினார்.
சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,
சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் கைதிகளுக்கு எந்தவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை. உரிய பாது காப்புக்களும், வசதிகளும் வழங்கப்பட் டுள்ளன. அத்துடன் சிறைச்சாலைகளில் காணப்படும் இடப்பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் புதிய சிறைச் சாலைகள் அமைக்கப்படவிருப்பதுடன், மீண்டும் மீண்டும் சிறைக்கு வரும் கைதிகளின் மனோநிலையை மாற்றும் வகையில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண சிறைச்சாலையை புதியதொரு இடத்தில் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டில் இதன் கட்டுமானப் பணிகளை பூர்த்தி செய்ய எதிர்பார்த்துள்ளோம். மாத்தறை சிறையையும் புதிதாக அமைக்கவுள்ளோம். இது மாத்திரமன்றி சிறைக் கைதிகளுக்கு மனோரீதியான சிகிச்சைகள் மற்றும் உபதேசங்களை வழங்கி அவர்களை சமூகத்தில் நல்ல பிரஜைகளாக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளன. இதன் மூலம் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும்.
சிறைக் கைதிகளுக்கு நாம் பல்வேறு பயிற்சிகளை வழங்குகின்றோம். சிறைலிருந்து விடுதலையாகிச் சென்ற பின்னர் மீண்டும் சிறைக்குச் செல்லாத வகையில் சமூகத்தில் அவர்களுக்கு சிறந்த இடத்தைப் பெற்றுக் கொடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சிறைச்சாலைகளில் நவீன கருவிகள் இல்லாமையாலேயே சிறைச்சாலை அதிகாரிகளால் தேடுதல்களை நடத்த முடியாதுள்ளது. இதற்கமையவே வரவு செலவுத் திட்டத்தில் எமது அமைச்சுக்கு 1.88 மில்லியன் ரூபா ஒதுக் கப்பட்டுள்ளது. இதேவேளை 12,000 முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு பெற்று சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.