பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, கொழும்பு மேயர் எம்.ஜே.எம்.முஸம்மில் ஆகியோரினால் இக்கட்டடம் திறந்துவைக்கப்பட்டது.
குதிரைப் பந்தயத்தில் ஈடுபடுகின்ற வீரர்களின் ஓய்வறைகளாகவும் விசாரணை அறைகளாகவும் இருந்த பகுதிகள் தற்சமயம் மக்டொனல், லக்சல போன்ற பிரபல நிறுவனங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றமை சிறப்பானதாகும்.
இலங்கை புற்றரை பராமரிப்பு கழகத்தின் கீழிருந்த கறுவாத்தோட்ட குதிரை பந்தய தடாகம் தற்பொழுது பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
கொழும்பு நகரை அழகுபடுத்தும் வேலைத் திட்டத்தின் கீழ் இராணுவ பொறியியல் துறையினரால் இந்த பழைய கட்டடம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. 125 மில்லியன் ரூபாய் செலவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இக்கட்டட நிர்மாணத்தில் சுமார் 300 இராணுவத்தினர் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. படங்கள்: சந்திம ஹெட்டிய
.jpg)


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.