டெல்லி: ஊழல் புகார்கள் குறித்து பொதுவிவாதம் நடத்த வருமாறு பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு சமூக ஆர்வலர் அர்விந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லியில் பேசிய கெஜ்ரிவால், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர், சோனியா உள்ளிட்டோர் தாமாக முன்வந்து விளக்கம் அளிக்க வேண்டும். அதேபோல் ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பினரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் தர தயாராக உள்ளனர் என்றார்.
மேலும் பாஜக மற்று காங்கிரஸ் கட்சிகள் இரண்டுமே ஊழல் செய்ததற்கான ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் பாதுகாத்து வருகின்றனர் என்றார் கெஜ்ரிவால்.1india
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.