......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 22 October 2012

கடலுக்கடியில் ஒக்சிசன் குறைவதால் மீன்கள் கூட்டமாக மேல்நோக்கி வருகை


உஷ்ண நிலை, காலநிலை மாற்றங்களே காரணம்: நாரா அறிவிப்பு
கிழக்கு மாகாணத்தில் அதிகளவு மீன் கரைக்கு வருவதற்கும், அதிகளவு மீன் பிடிபடுவதற்கும் காலநிலை மாற்றமும், கடல் நீரில் ஏற்பட்டுள்ள
உஷ்ண நிலை மாற்றமுமே காரணம் என நாரா நிறுவனத்தின் தலைவர் எஸ்.ஏ.எம்.
அஸ்மி தெரிவித்தார். சுனாமியொன்றுக்கான அறிகுறி என எவரும் அஞ்சத் தேவை யில்லை. அத்துடன் இந்த மீன்களை உணவுக்காக பயன்படுத்துவதற்கும் அஞ்சத்தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கடலுக்கடியிலிருந்து சேறுடன் கலந்த கடல் நீர் மேல் மட்டத்தை நோக்கி வருவதால் ஒக்ஸிஸன் குறைவடைகிறது. அத்துடன் கடல் நீர் கலங்குவதாகவும் நீரோட்டம் வேறுபடுவதாலும் கடல் நீரின் உஷ்ண நிலை அதிகரிப்பதாலும் இவ்வாறு மீன்கள் கரைப்பகுதியை நோக்கி வருகின்றன என்றும் குறிப்பிட்டார்.
மேலும் கரைவலைப்பாடுகளுக்கு போதுமான அளவு மீன் பிடிபடுவதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் தற்போது சட்டவிரோதமான முறைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பது முற்றாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாகவும் மீன்களின் உற்பத்தியும் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE