......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday 25 October 2012

அமைச்சரவை மாற்றத்திற்கு முன் அதிகாரிகள் மட்டத்தில் மாற்றம்?

கிழக்கு, வடமேல் மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளுக்கான தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம் என பரவலாக பேசப்பட்ட போதிலும் அதிகாரிகள் மட்டத்திலேயே விரைவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவிருப்பதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

ஜனாதிபதி செயலகத்திலிருந்தே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக ஜனாதிபதியின் பேச்சாளராக கடமையாற்றி வரும் பந்துல ஜயசேகர இடமாற்றப்பட்டு அவரது வெற்றிடத்துக்கு இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடமையாற்றி வரும் மொஹான் சமரநாயக்க நியமிக்க கூடும் என்று தகவல்கள் தெரிவித்தன.

இதேவேளை, இலங்கை இதழியல் கல்லூரியின் பணிப்பாளராக கடமையாற்றும் அனுராதா கே. ஹேரத் ஜனாதிபதியின் சர்வதேச ஊடக பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியதும் புதிய பேச்சாளர் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் பேச்சாளரான பந்துல ஜயசேகர டெய்லி நியூஸ் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE